/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் இரும்பு ஈட்டி, மணி கண்டெடுப்பு
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் இரும்பு ஈட்டி, மணி கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் இரும்பு ஈட்டி, மணி கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் இரும்பு ஈட்டி, மணி கண்டெடுப்பு
ADDED : நவ 09, 2024 02:23 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2,400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், சிறிய அளவிலான இரும்பு ஈட்டி, சதுரங்க ஆட்டக்காய் சங்கு வளையல், மணி கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், “இங்கு வாழ்ந்த முன்னோர்கள் உணவிற்காக விலங்குகள், பறவைகளை வேட்டையாட கருவிகள் தயாரித்துள்ளனர். அதன்படி, சிறிய அளவிலான இரும்பாலான ஈட்டி கிடைத்துள்ளது. மேலும், பொழுதுபோக்கில் ஆர்வம் உள்ளதற்கு ஆதாரமாக சதுரங்க ஆட்டக்காய்களும் கிடைத்துள்ளன,” என்றார்.