/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க எதிர்பார்ப்பு
/
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க எதிர்பார்ப்பு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க எதிர்பார்ப்பு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2024 04:29 AM
விருதுநகர் : தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்காமல் காலதாமதம் செய்வதால் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் கரும்பின் கொள்முதலுக்கான குறைந்த பட்ச ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.3151 ஆக உள்ளது. இதில் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அரசு அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது வரை நிறைவேற்றாமல் உள்ளது.
2023-24ம் ஆண்டில் கரும்பு வினியோகம் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என சட்டசபையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்போடு நிற்கிறது.
எப்படி அமல்படுத்துவது என மாவட்ட கலெக்டர்களுக்கே தெரியவில்லை.
தீபாவளிக்கு முன் அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு ஒரு நாளே உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் கோரிக்கை வைத்துள்ளார்.
கரும்பு விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது: விருதுநகர் மாவட்ட கரும்பு விவசாயிகள் தேனி, சிவகங்கை சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24ம் அரைவை பருவத்திற்கு சப்ளை செய்த கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.215ஐ மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.