/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வடக்குநத்தம் - கீழ்க்குடி இருவழி சாலையாக அமைக்க எதிர்பார்ப்பு
/
வடக்குநத்தம் - கீழ்க்குடி இருவழி சாலையாக அமைக்க எதிர்பார்ப்பு
வடக்குநத்தம் - கீழ்க்குடி இருவழி சாலையாக அமைக்க எதிர்பார்ப்பு
வடக்குநத்தம் - கீழ்க்குடி இருவழி சாலையாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 06, 2024 05:52 AM

திருச்சுழி,: திருச்சுழி அருகே வடக்கு நத்தத்திலிருந்து கீழ்க்குடி வரையுள்ள ஒரு வழி பாதையை இரு வழி பாதையாக மாற்ற வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் 3 மாவட்டங்களை இணைக்கும் சந்திப்பாக உள்ளது.
இங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட எல்லையாகவும், கீழ்க்குடி ராமநாதபுரம் மாவட்ட எல்லையாகவும், பரளச்சி விருதுநகர் மாவட்ட எல்லையாகவும் உள்ளது. வடக்குநத்தத்திலிருந்து கீழ்க்குடி வரை 15 கி.மீ., தூரமுள்ள ரோடு ஒரு வழி பாதையாக உள்ளது.
இந்த ரோட்டில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் பயணிக்கின்றன. சென்னை செல்லும் பஸ் பெரும் இந்த ரோட்டில் தான் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. ஓரத்தில் ஒதுங்கினால் வாகனங்கள் சிக்கிக் கொள்கிறது.
முக்கியமான இந்த ரோட்டை இரு வழி பாதையாக மாற்றினால் போக்குவரத்து சிரமமின்றி நடக்கும். இந்த ரோட்டில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்கும்.
ஒரு வழிப் பாதையாக இருப்பதால் தான் தனியார் பஸ்கள் இந்தப் பாதையில் வர தயங்குகின்றன.
இதனால் போதுமான பஸ் வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் வடக்குநத்தம் - கீழ்க்குடி ரோட்டை இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இந்த பகுதி கிராம மக்களின் எதிர்பார்ப்பாகம் உள்ளது.

