/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தைகளை நன்றாகபடிக்க வைப்பது அவசியம்
/
குழந்தைகளை நன்றாகபடிக்க வைப்பது அவசியம்
ADDED : டிச 22, 2024 07:26 AM
வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தாணிப்பாறை ராம் நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம், மருத்துவ முகாம் நடந்தது.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேசியதாவது, மலைவாழ் மக்களாகிய நீங்கள் தான் இந்த நாட்டின் முதன்மை குடிமகன்கள். உங்களால் தான் மற்றவர்கள். இக்காலகட்டத்தில் கல்வி மிகவும் அவசியம். குழந்தைகளை கண்டிப்பாக படிக்க வையுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தால் தான் நீங்களும் இந்த சமூகத்தில் முன்னேற முடியும்.
நீங்கள் இந்தியாவில் எங்கு இருந்தாலும் சட்ட ஆலோசனைகளை பெற யாவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு என்ற உயர்ந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தேசிய சட்டப் பணியில் ஆணைக்குழுவானது கட்டணம் இல்லா தொலைபேசி எண் 15100 அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார்.
விழாவில் நீதிபதிகள் கவிதா, வீரணன், ஜெயசுதாகர், ரத்தினவேல் பாண்டியன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மருத்துவ முகாம் நடந்தது. ஏற்பாடுகளை ராம்கோ ட்ரஸ்ட் மேலாளர் முருகேசன், சி எஸ் ஆர் நிதி மேலாளர் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.