/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாய்ப்பால் தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தாய்மார்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதும் அவசியம்

ADDED : மார் 12, 2024 11:48 PM
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தினமும் பல பிரசவங்கள் நடக்கிறது.
இந்த மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள், தாய்மார்களின் மேல்சிகிச்சைக்காக பலர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு மகப்பேறு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு தனியாக இயங்குவதால் பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு குறைமாத எடை குறைந்த குழந்தைகள், நோய் வாய்ப்பட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர இயலாத தாய்மார்களின் குழந்தைகள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கான தாய் பால் பற்றாக்குறையை போக்க விருதுநகர் அரசு மருத்துவமனையில் 2019 ஆக. 21 முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்தாண்டு 1406 குழந்தைகள் பயனைடைந்துள்ளனர்.
இந்த வங்கிக்கு மாவட்டத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளில் இருந்துஅமிர்தா பவுண்டேஷன் மூலம் தன்னார்வலர்கள் தாய்ப்பால் அளித்து வருகின்றனர். ஆனால் தாய்பால் வங்கியின் செயல்பாடுகள், யாரெல்லாம் தாய்பால் வங்கிக்கு தானம் அளிக்கலாம், யார் தாய்ப்பால் வங்கிக்கு தானம் அளிக்க முடியாது என்ற புரிதல் மக்களிடையே இல்லாததால் தாய்மார்கள் தயாராக இருந்தும், பெற்றோர் தயங்குகின்றனர்.
இதனால் தாய்ப்பால் வங்கிக்கு டாக்டர்கள், செவிலியர்கள் ஆலோசனை வழங்கி வங்கிக்கு தேவையான தாய்பால் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தாய்பால் தானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உள்ள வங்கிக்கு கூடுதல் தாய்பால் கிடைத்து அதிக குழந்தைகள் பயனடைய முடியும்.