/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவர் பலியான பரிதாபம்
/
இரு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவர் பலியான பரிதாபம்
இரு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவர் பலியான பரிதாபம்
இரு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவர் பலியான பரிதாபம்
ADDED : அக் 06, 2024 04:42 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருவேறு சம்பவங்களில் மின் சாரம் தாக்கி மின் ஊழியர் உட்பட இருவர் பலியாகினர்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி ஞானியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி சண்முகத்தாய் 50. ஆறு குழந்தைகள் உள்ள நிலையில் வாசலின் மேல் இருந்த மின்விளக்கின் வயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு இரும்பு கேட்டில் பாய்ந்துள்ளது.
எதிர்பாராத நிலையில் இரும்பு கம்பியை பிடித்த சண்முகத்தாய் துாக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் சேர்த்ததில் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இதே போல் ராஜபாளையம் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியில் இருந்த தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியை சேர்ந்த ரவி 34, செப்.28 ல் மின்மாற்றி பழுதின் போது மின் சாரம் தாக்கியதில் 40 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.