/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லிகை பூ கிலோ ரூ.1000க்கு விற்பனை
/
மல்லிகை பூ கிலோ ரூ.1000க்கு விற்பனை
ADDED : செப் 20, 2024 06:15 AM
அருப்புக்கோட்டை : மல்லிகை பூ வரத்து குறைவால் விலை கிலோ ரூ.1000க்கு விற்பனையானது.
அருப்புக்கோட்டை மல்லிகைக்கு புகழ் பெற்றது. நகரை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகைப்பூ அதிகம் விளைவிக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு முன்பு விசேஷ நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள் அதிகம் இருந்தாலும், பூ வரத்து குறைந்து போனதாலும் 1 கிலோ மல்லிகை பூ 3 ஆயிரத்தை தொட்டது.
படிப்படியாக குறைந்தாலும் பூ வரத்து குறைவு நீடிப்பதால் நேற்று 1 கிலோ மல்லிகை ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் பூ வரத்து குறைந்தே இருக்கும். பின்னர் விலை குறையும். நேற்று கனகாம்பரம் 1 கிலோ 500, பிச்சி, முல்லை 400, செவ்வந்தி சம்பங்கி, ரோஜா 100 ரூபாயாக இருந்தது.