ADDED : ஜன 30, 2025 10:39 PM
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் வரலாறு காணாத வகையில் மல்லிகை பூ கிலோ ரூ. 4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
அருப்புக்கோட்டையில் மல்லிகைப்பூ பிச்சி முல்லை கனகாம்பரம் ரோஜா உள்ளிட்ட பூக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டை மல்லிகை நன்கு மனத்துடன் இருக்கும் இதற்கு நல்ல கிராக்கியும் உண்டு.
பூக்கள் வரத்து குறைவாலும் தொடர்ச்சியாக நாளை, ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
நேற்று அருப்புக்கோட்டையில் மல்லிகை பூ ஒரு கிலோ 4000, முல்லை 2000, பிச்சி 1800, வெள்ளை பிச்சி 2500, கனகாம்பரம் 1500 என பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
திருமணம் என்றாலே அங்கு மல்லிகை பூவிற்கு தான் மவுசு அதிகம். மல்லிகை பூ உச்ச விலையில் இருந்தாலும் வேறு வழி இன்றி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

