ADDED : ஏப் 22, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணா நகரில் ஓய்வு பெற்ற மில் மேனேஜர் குப்புசாமி வெளியூர் சென்றிருந்த நிலையில் பிப்.22 அன்று அவரது வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தனிப்படை போலீசார் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நடந்த ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட உத்தமபாளையம் ஐயப்பன் 24, அர்ஜுன் 31, மதுரையை சேர்ந்த வேட்டைக்காரன் 32 ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த கொள்ளை சம்பவத்தில், மூவருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து வன்னியம்பட்டி போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.