/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
55 ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி
/
55 ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி
ADDED : நவ 09, 2025 07:14 AM
விருதுநகர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் உள்ள 55 துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குவிருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து ஜாலி போனிக்ஸ் பயிற்சி துவங்கப் பட்டுள்ளது.
ஜாலி போனிக்ஸ் என்பது துவக்க நிலை குழந்தைகளுக்கு செயற்கை ஒலியியல் மூலம் ஆங்கிலம் கற்பிப்பதற்கும், வேடிக்கையான, குழந்தைத் தன அணுகுமுறையான பயிற்சி முறை ஆகும்.
தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இந்த பயிற்சி முறை தற்போது ஜாலி பியூச்சர்ஸ் என்ற தனியார் அமைப்பு வாயிலாக முதன் முறையாக அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்வழி பயிலும் அரசு பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளின் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும்.
அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கு துவக்க நிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
சி.இ.ஒ., அரவிந்தன், துவக்கக்கல்வி டி.இ.ஓ., ஜான்சன் சிவகாசி டி.இ.ஓ., செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.விரைவில் பிற நிலை ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறையினர் கூறினர்.

