/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காமராஜ் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை முயற்சி
/
காமராஜ் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை முயற்சி
காமராஜ் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை முயற்சி
காமராஜ் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை முயற்சி
ADDED : ஜூலை 16, 2025 01:38 AM

விருதுநக : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் காமராஜரின் பிறந்தாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. கல்லுாரியை சேர்ந்த 1230 மாணவர்கள் ஒன்றுக் கூடி ஒரு காணொலிபதிவை உருவாக்கினர்.
ஒவ்வொரு மாணவரும் காமராஜரின் வாழ்க்கை, தனித்தன்மை, இந்திய வரலாற்றில் அவரது பங்களிப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை நேரலையில் காணொலியாக பதிவு செய்தனர்.
இந்திய சாதனை புத்தகத்தில் பெயரை பதிவு செய்யும் நோக்கில் இந்த முயற்சி செய்யப்பட்டது.
இச்சாதனை நிகழ்வு கல்வி, சமூக நலனுக்கு முன்னுரிமை அளித்த ஒரு தலைவராக, காமராஜரின் செல்வாக்கு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கத்தை தரும் விதமாக அமைந்ததாகவும், 1230 மாணவர்கள் பங்கேற்று அவரது வாழ்வியலை பதிவு செய்ததன் மூலம் இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதிக்கசெய்த முயற்சி, அவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும் என கல்லுாரி நிர்வாகத்தினர் கூறினர்.

