/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரைமேல் முருகன் கோயில் திருவிழா துவக்கம்
/
கரைமேல் முருகன் கோயில் திருவிழா துவக்கம்
ADDED : மார் 08, 2024 12:24 PM
நரிக்குடி: நரிக்குடி வீரக்குடியில் கரைமேல் முருகன் கோயில் மகா சிவராத்திரி திருவிழா தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றுத்துடன் துவங்கிய விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த காப்பு கட்டி, விரதத்தை தொடங்கினர். 3ம் நாளான இன்று மகா சிவராத்திரி விழா, 6ம் நாள் அன்று பொங்கல் விழா நடைபெறும்.
இக்கோயிலில் இன்று கணபதி ஹோமம், ருத்ர அபிஷேகம், சங்காபிஷேகம், பச்சை வாழை பரப்புதல், வள்ளி, தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் முருகன் புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பறவை காவடி, அலகு குத்துதல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

