நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நடக்க உள்ள வளர்ச்சி பணிகள் பூமி பூஜை விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியில், நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் சார்பாக, மதுரை ரோட்டின் இருபுறமும் 700 லட்சம் நிதியில் வாறுகால், தடுப்பு சுவர், சிறுபாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
மேலும் பசும்பொன் நகரில் சிமென்ட் தரைமட்ட தொட்டி, ராஜீவ் நகர் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.