/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் குல்லுார்சந்தை அணை
/
தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் குல்லுார்சந்தை அணை
தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் குல்லுார்சந்தை அணை
தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் குல்லுார்சந்தை அணை
ADDED : மார் 21, 2024 01:15 AM

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் உள்ளது குல்லூர்சந்தை அணை. சில ஆண்டுகளாக அணை கழிவுநீரால் மாசடைந்து அதன் இயற்கை தன்மை கெட்டு, விவசாயம் பாதிப்பு அடைந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1979 ல், அடிக்கல் நாட்டினார். பின்னர் 1984ல் கட்டி முடிக்கப்பட்டு, 1986 ல் பயன்பாட்டிற்கு வந்தது. குல்லூர்சந்தை அணைக்கு மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிறைந்து அதன் நீர் வழிப்பாதையில் வந்தும், காடுகளில் பெய்யக்கூடிய மழையும் சேர்ந்து விருதுநகர் வழியாக கௌசிகா நதியின் மூலம் இந்த அணையில் நீர் சேரும்.
இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 890 ஏக்கர் பாசனம் பெறும். குல்லூர்சந்தையில் செயல்படும் மீன் வளர்ச்சி கழகம் மூலம் சுமார் 100 குடும்பங்கள் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் அருகே பாவாலி, சிவஞானபுரம், ரோசல்பட்டி, கூரைக்குண்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள 20 ஆயிரம் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அணையில் கலக்கிறது.
இதனால், தண்ணீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதேபோன்று மீன்பிடி தொழிலும் செய்ய முடியாமல் போய்விட்டது. அனை பராமரிக்கப்பட்டு கழிவு நீர் விடாமல் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலின் போது மட்டும் கட்சிகளின் வாக்குறுதியாக உள்ளன. அதன் பின் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அணையில் போதிய தண்ணீர் இருந்தும் மடைகள் மூலமாக வரும் தண்ணீர் கழிவு நீராக இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயிகள் நலன் கருதி, மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்பட செய்ய அணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.

