ADDED : பிப் 22, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, - சிவகாசி வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
பிப். 19 ல் பகவத் பிரார்த்தனை ஆச்சார்ய யஜமான அழைப்பு, நுாதன பிம்பம் புண்ணிய தீர்த்தம், ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியோடு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
மறுநாள் நித்யா நுஸந்தான கோஷ்டி நிகழ்ச்சியோடு இரண்டாவது கால யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை மூன்றாவது கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று மூல மந்திர ஹோமங்களுடன் வெங்கடாசலபதி பெருமாள் மற்றும் பரிவார மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.