
சேத்துார்: சேத்துார் ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆதி புத்திர கொண்ட அய்யனார் சாமி, வீரகாளியம்மன் பரிவார தெய்வங்கள் மாயாண்டி, கருப்பசாமி, இருளப்பசாமி உள்ளிட்ட சாமிகளோடு அருள் பாலிப்பதுடன் தமிழகத்தில் அய்யனார் கோயில்களில் சைவ கோயிலாக விளங்கி புகழ் பெற்றுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை தொடங்கி யாக கால பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்வான நான்காம் கால யாக பூஜைகள் நடந்து ராஜகோபுரம் மூலவர், பரிகார பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீப ஆராதனை காட்டப்பட்டது. அன்னதானம் நடந்தது.
ஏற்பாடுகளை முதுநிலை தலைவர் சோமசுந்தரம், நிர்வாக குழு தலைவர் சந்திரமோகன், துணைத் தலைவர் குருவையா செயலாளர் ஜெயச்சந்திரன், இணைச்செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரேஸ்வரன் உள்ளிட்ட திருப்பணி கமிட்டியினர் செய்தனர்.

