/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l சேதமடைந்த ரோடுகளை வேகமாக சீரமைப்பது அவசியம்
/
l சேதமடைந்த ரோடுகளை வேகமாக சீரமைப்பது அவசியம்
ADDED : ஜூன் 27, 2024 05:39 AM

மாவட்டத்தில் தார் ரோடுகள், பேவர் பிளாக் ரோடுகள் என உள்ளாட்சிகளில் போடப்பட்ட அனைத்து ரோடுகளும் கமிஷன் வேட்டையால் தரமின்றி போடப்படுகின்றன. 5 ஆண்டுகள் வரை தரமாக இருக்க வேண்டிய ரோடுகள் மிக விரைவிலே சேதமடைந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காகவும், பாதாளசாக்கடை பணிக்காகவும் ரோடுகள் சேதப்படுத்தப்படுகின்றன.
பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையால் தினசரி அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் நகர்ப்புறங்களில் சிறியதாக துவக்கத்தில் ஏற்படும் சேதம், நாளடைவில் பெரும் பள்ளமாகி தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பக்கம் வேகத்தடைகள் விபத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் பல இடங்களில் எதிர்பாராத இடங்களில் உள்ள பள்ளங்களும் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுத்துகின்றன.
இரவில் மின்விளக்குகள், மிளிரும் விளக்குகள் இல்லாத மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் இந்த பள்ளங்கள் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்கின்றன.
இவ்வாறு ஏற்படும் பள்ளங்களை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் சரி செய்யாமலே காலம் கடத்தி வருகின்றன. தினசரி அப்பகுதியை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் பள்ளங்களை சமப்படுத்தும் வகையில் அருகில் இருக்கும் மக்களை கற்கள், கட்டுமான கழிவுகள், டயர்கள் கொண்டு பள்ளத்தை அடைக்கின்றனர். மேலும் சேதமடைந்த வாறுகால் பாலங்கள் சரி செய்யப்படாமலே உள்ளதால் பெரிய கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுவும்ஒரு வகையில் விபத்தை அதிகரிக்கிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடிக்கும் வழிவகுக்கிறது. இந்த பிரச்னை 450 ஊராட்சிகள், 9 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள், மாநகராட்சி ஒன்றிலும் உள்ளது. அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது. இதை தடுக்க பேட்ஜ் ஒர்க் செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பள்ளங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஏற்கனவே கட்டுமான கழிவுகளை கொண்டு நிரப்பப்பட்ட பள்ளங்களை கண்டறிந்து அவற்றை புனரமைத்து பேட்ஜ் பணிகள் செய்ய வேண்டும்.