/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பற்றாக்குறை சுத்திகரிப்பு நிலையத்தில் குவியுது கழிவுமண்

ADDED : மே 23, 2025 12:09 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பற்றாக்குறையால் கழிவுமண் குவிந்து வருகிறது.
விருதுநகர் நகராட்சியின் பாதாளசாக்கடை திட்ட பணியில் 2 பம்பிங்(கழிவுநீர் உந்துநிலையம்) நிலையங்கள், 6 லிப்டிங்(கழிவுநீரேற்று நிலையம்) நிலையங்கள் மூலம் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு கவுசிகா நதி, குல்லுார்சந்தை அணைக்கு அனுப்பப்படுகிறது. கழிவுநீர் பம்பிங், லிப்டிங் நிலையங்கள் பெயரளவிலும், சில இடங்களில் சுத்தமாக செயல்படாமலும் இருந்தன. தற்போது செயல்பட்டு வந்தாலும், பாதாள சாக்கடை குழாய்களில் கழிவுமண் வரத்து குறையாமலே உள்ளது.
அடைப்பை அகற்றும் ஜெட் ராடர் இயந்திரம் ஒன்று தான் உள்ளது. கழிவு மண்ணை அகற்றும் வாகனம் பற்றாக்குறை உள்ளது. ஜெட் ராடர் இயந்திரம் கூடுதலாகவும், கழிவுமண்ணை அகற்றும் வாகனங்கள் இரண்டும் வாங்கினால் பாதாளசாக்கடை மேலாண்மை பணிகள் சுமுகமாக நடக்கும்.
பாத்திமா நகர் லிப்டிங் நிலையத்தில் கடந்த வாரத்தில் இருந்து மோட்டார் ஓடவில்லை. இதனால் பாதாளசாக்கடை மெயின் குழாய் கசிந்து அருகில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதாளசாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், பம்பிங், லிப்டிங் அறைகளை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பதும், வாகனங்களை அதிகப்படுத்தி, முறையாக குழாய்களில் இருந்து மண்ணை அள்ளுவதும் தான் நிரந்தர தீர்வாக இருக்கும்.
அதை விடுத்து சுத்திகரிப்பு நிலையத்தில் வைத்து மண்ணை அகற்றுவது தேவையற்ற வேலையே என நகராட்சி ஊழியர்கள், மக்கள் புலம்புகின்றனர்.