/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணியாளர்களின் அலட்சியத்தால் சுகாதார பணிகளில் தொய்வு! குப்பை அள்ளுவதிலும், வாறுகால் சுத்தம் செய்வதிலும்..
/
பணியாளர்களின் அலட்சியத்தால் சுகாதார பணிகளில் தொய்வு! குப்பை அள்ளுவதிலும், வாறுகால் சுத்தம் செய்வதிலும்..
பணியாளர்களின் அலட்சியத்தால் சுகாதார பணிகளில் தொய்வு! குப்பை அள்ளுவதிலும், வாறுகால் சுத்தம் செய்வதிலும்..
பணியாளர்களின் அலட்சியத்தால் சுகாதார பணிகளில் தொய்வு! குப்பை அள்ளுவதிலும், வாறுகால் சுத்தம் செய்வதிலும்..
ADDED : நவ 12, 2025 12:20 AM

அருப்புக்கோட்டை: உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள், அலட்சியத்தால் குப்பைகள் அள்ளுவது ,வாறுகால் தூய்மை உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் 148 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் குப்பைகள் அள்ளுவதை அரசு தனியார் இடத்தில் ஒப்பந்த முறையில் விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகராட்சிகளிலும் நிரந்தர தூய்மை பணியாளர்களை தவிர குறிப்பிட்ட சதவிகிதத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
நிரந்தர பணியாளர்கள் வாறுகால் சுத்தம், உரக் கிடங்குகள், பஸ்ஸ்டாண்டுகள் உள்ளிட்ட தூய்மை பணிகளில் இருப்பர். குப்பைகளை அந்தந்த வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று வாங்குவது ஒப்பந்த பணியாளர்களின் பணி.
இதனால் மாவட்டத்தில் உள்ள பல நகராட்சிகளில் குப்பைகள் அள்ளுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளில் மோசமான நிலையே உள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 78 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 180 ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். ஆனாலும் நகர் குப்பை நகராக உள்ளது.
ஒப்பந்த முறையில் பணிகள் ஒப்படைத்ததிலிருந்து தூய்மை பணிகள் ஏனோ தானோ என்று தான் நடக்கிறது. ஒப்பந்த பணியாளர்கள் குப்பைகள் அள்ளுவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
நகரின் முக்கிய பகுதிகளான அண்ணாதுரை சிலை பகுதி, காந்திநகர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை எந்த நேரமும் தேங்கி கிடக்கின்றன. வீடுகளிலும் முறை யாகச் சென்று குப்பைகளை வாங்குவதும் இல்லை. இதேபோன்று வாறுகால் அள்ள நிரந்தர பணியாளர்களும் போதுமான அளவில் இல்லை.
வாறுகால் அள்ளுவது தொடர்பான பிரச்னைகள் குறித்து நகராட்சியின் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நிரந்தர தூய்மை பணியாளர்களில் 40 பணியாளர்கள் 55 வயதை கடந்தவர்களாக இருப்பதால் இவர்களால் பணியை ஒழுங்காக செய்ய முடியவில்லை.
இதேபோன்று ஒருசில தூய்மை பணியாளர்கள் வேலைக்கு வராமலேயே ஊதியம் பெறுகின்றனர். இதனால் இருக்கின்றவர்களை வைத்து தூய்மை பணி செய்வதில் சிக்கல் ஏற் படுகிறது.
ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து நகரில் வாறுகால் தூய்மை, குப்பைகள் வாங்குவது ஆகிய பணிகளில் தொய்வில்லாமல் நடக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே சிவகாசி மாநகராட்சிகளில் தனியார் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிலவி வருவதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
அரசு நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தர தூய்மை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்பி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

