/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் பாதிப்பு
/
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் பாதிப்பு
ADDED : நவ 12, 2025 11:56 PM
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே மக்காச்சோளம் பயிர்களை சேதம் ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தி உரிய இழப்பீடு வழங்குவதுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சத்திரப்பட்டி அடுத்த நரிக்குளம், சிவலிங்காபுரம், அருணாச்சலபுரம், என். புதுார், வடகரை, செல்லம்பட்டி,செல்லம்பட்டி, கொருக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோள விவசாயம் நடந்து வருகிறது.
இப்பகுதியில் செல்லும் தேவி ஆற்றின் நீர்வழிப் பாதையை ஆதாரமாக கொண்டு வளர்ந்துள்ள புதர்கள், நரி குளம் சிவலிங்காபுரம் உள்ளிட்ட கண்மாய்களில் கருவேல மரங்களில் காட்டுப்பன்றிகள், மான்கள் பதுங்கி வாழ்ந்து வருகின்றன.
விவசாய நிலங்களில் இவை புகுந்து சேதம் ஏற்படுத்துவதுடன் ஒவ்வொரு சாகுபடிகளின் போதும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக நரிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து
உள்ளிட்ட விவசாயி களின் மக்காச்சோள பயிர்களை காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாரிமுத்து, கண்மாய் புதர்களில் பதுங்கும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். இவற்றிலிருந்து பயிர்களை காக்க காவல் இருந்த போது கடந்த ஜூலை மாதம் காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தார். உயிருக்கு பாதுகாப்பு அற்ற நிலையில் சேதப்படுத்தி வரும் பன்றிகளை கட்டுப்படுத்துவதுடன் சேதத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

