/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் மின்னல் தாக்கி வக்கீல் பலி
/
திருச்சுழியில் மின்னல் தாக்கி வக்கீல் பலி
ADDED : ஏப் 26, 2025 02:05 AM

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நீதிமன்றம் வளாகத்தின் முன் நின்று பேசிக்கொண்டிருந்த வக்கீல் முனியசாமி 27, மின்னல் தாக்கி பலியானார்.
திருச்சுழி அருகே முத்துராமலிங்கம் புது கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் முனியசாமி. நேற்று மதியம் 3:50 மணிக்கு திருச்சுழியில் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் முனியசாமி நீதிமன்றம் வளாக மரத்தடியில் நின்று கொண்டு வழக்கு தாக்கல் செய்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது அலைபேசியில் கால் வந்ததையடுத்து பேச முயன்ற போது திடீரென்று இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் முனியசாமி சம்பவயிடத்தில் பலியானார். அவருடன் பேசிக் கொண்டிருந்த மஞ்சம்பட்டியை சேர்ந்த பிச்சை 40, சேகர் 25, லேசான காயமடைந்தனர். அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.

