தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கண்மாய் காப்போம்

கண்மாய் காப்போம்

கண்மாய் காப்போம்


UPDATED : நவ 18, 2026 04:36 PM

ADDED : நவ 18, 2026 04:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 04:36 PM ADDED : நவ 18, 2026 04:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மடைகளுக்கு தடுப்பு சுவர் இல்லை. மழைநீர் வரத்து ஓடை அடைப்பு.

*பரளச்சி பெரிய கண்மாயின் அவலம்

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும் மழை நீர் வரத்து ஓடை அடைக்கப்பட்டும், கண்மாய்களில் உள்ள மடைகளுக்கு தடுப்பு சுவர் இல்லாததாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பரளச்சியில் நீர்வள துறை கட்டுப்பாட்டில், 400 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. கண்மாயை சுற்றி பரளச்சி, புல்லா நாயக்கன்பட்டி, மேலையூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. நெல், மக்காசோளம், உளுந்து, பருத்தி, கம்பு உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கண்மாய் முறையான பராமரிப்பு இல்லை. ஒரு பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. கண்மாய்க்கு 5 மடைகள் உள்ளன. இவற்றை .சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு செய்தனர். இதில், கரை உயர்ந்து மடைகள் தாழ்ந்து விட்டது. தடுப்பு சுவர் கட்ட வேண்டும். ஒவ்வொரு மடைக்கும் அதன் ஷட்டரை திறந்து விட தனி தனியாக 5 சாவிகள் உள்ளன. மழை காலங்களில் கண்மாயில் தண்ணீர் அதிகமாக சேர்ந்தாலும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் ஒவ்வொரு மடைக்கும் கிராமங்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக சாவிகள் ஒப்படைக்கப்பட்டு வந்தது. அந்தந்த பகுதி விவசாயிகள் தண்ணீர் தேவைக்கு ஏற்ப சாவியை பயன்படுத்தி மடையை திறந்து கொள்வர். ஆனால், தற்போது நீர்வளத்துறை ஒரு சாவியை மட்டும் கொடுத்துள்ளனர். இதனால், பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலையூர் மெயின் ரோடு அருகில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மழைநீர் வரத்து ஓடையை மூடிவிட்டனர். தண்ணீர் அதிகமாக வெளியேறினால் புல்லா நாயக்கன்பட்டி ஊருக்குள் சென்று விடும்.

சாவி வேண்டும்



கோபால்சாமி, விவசாயி : பரளச்சி பெரிய கண்மாயின் 5 மடைகளுக்கான சாவியை அந்தந்த பகுதியில் ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு விவசாய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மடையில் தேவையான தண்ணீரை திறந்து கொள்வர். ஒரு சாவி கொடுப்பதால் மற்ற கிராமங்கள் பாதிக்கப்படும். மடைகளைச் சுற்றி சுற்று சுவர் கட்ட வேண்டும். அரசு கண்மாயில் முழுமையாக பராமரித்து தேவையான பணிகளை செய்து கண்மாயை பாதுகாக்க வேண்டும்.

காணாமல் போன ஓடை



செல்வம், விவசாயி : மேலையூர் பகுதியில் நான்கு வழிச்சாலை ரோடு அமைத்தபின் அதை ஒட்டி சர்வீஸ் ரோடு அமைக்க, அங்குள்ள மழைநீர் வரத்து ஓடையை மூடிவிட்டனர். மழை காலங்களில் தண்ணீர் கண்மாய்களுக்கு செல்லாமல், அருகிலுள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து விடும். கண்மாய்க்கு தண்ணீர் வரும் மழை நீர்வரத்து ஓடைகளை சீரமைக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை மூலமாக முறையாக வாறுகளை தூர்வாரி தடுப்புச் சுவர் அமைத்து கொடுக்க வேண்டும்.

பராமரிப்பு அவசியம்



பொன்னுபாண்டி : மழைக்காலத்திற்குள் கண்மாய்களை தூர்வாரி மடைகளை சரி செய்தால் தான் தண்ணீர் சேரும். பரளச்சி பெரிய கண்மாயில் மண் மேவியுள்ள பகுதிகளை தூர் வாரி சமன் செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us