UPDATED : நவ 18, 2026 11:05 PM
ADDED : நவ 18, 2026 04:34 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: ஓய்வூதிய சரிபார்ப்பு சட்டம் 2025ஐ திரும்பப் பெறுதல், மாதாந்திர மருத்துவப் படியை ரூ.1,000 ஆகவும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் ஓய்வூதியர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமை வகித்தார். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
