ADDED : ஏப் 28, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு நுாலகத்தில் நூலக வாசகர் வட்டம், பெருந்தன்மை தமிழ் ஆய்வு சங்கம் சார்பில் வாசகர் சந்திப்பு, நுாலக ஆய்வு கூட்டம் நடந்தது.
வாசகர் வட்டம் சார்பில் ஆறுமுகம் சேகர் தலைமை வகித்தார். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முன்னாள் தமிழ் துறை தலைவர் அழகர் தலைமை வகித்து புலவர் சிவகுமார் எழுதிய உழவர் பிள்ளைத்தமிழ் என்ற நுால் குறித்து பேசினார். முன்னாள் சப் கலெக்டர் ஆதிநாராயணன் உறுப்பினர் காளிராஜன் பங்கேற்று பேசினர்.

