/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தம்பதியை குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
தம்பதியை குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தம்பதியை குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தம்பதியை குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : அக் 31, 2025 01:36 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:  விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் வளர்ப்பு நாயை துாக்கிச் சென்ற பிரச்னையில் ஏற்பட்ட  முன் விரோதத்தில் கணவன், மனைவியை கொலை செய்த பொன்வசந்த்19, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாத்துார் ஏழாயிரம் பண்ணை அப்பணம்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் 45, மனைவி முத்துலட்சுமி 37. இத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பூக்கடை நடத்தி வந்தனர்.
இவர்கள் வளர்த்து வந்த நாயை முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்த பொன் வசந்த் 19, துாக்கிச் சென்ற சம்பவத்தில், இவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.
2015 ஏப்., 20 இரவு பூக்கடையை மூடிவிட்டு இருவரும் வீடு திரும்பிய போது பொன் வசந்தும், அவருடன் இருந்த 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்களும் சேர்ந்து இரும்பு குழாய், கத்தியால் தாக்கி  கொலை செய்தனர்.
ஏழாயிரம் பண்ணை போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் பொன்வசந்த் மீது  ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மணி தீர்ப்பளித்தார்.
சிறார்கள் 3 பேர் மீதான வழக்கு விசாரணை விருதுநகர் இளஞ்சிறார்களுக்கான நீதிமன்றத்தில் நடந்தது.

