/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட வணிக நிறுவனங்களில் அனுமதியின்றி இயங்கும் லிப்ட்
/
மாவட்ட வணிக நிறுவனங்களில் அனுமதியின்றி இயங்கும் லிப்ட்
மாவட்ட வணிக நிறுவனங்களில் அனுமதியின்றி இயங்கும் லிப்ட்
மாவட்ட வணிக நிறுவனங்களில் அனுமதியின்றி இயங்கும் லிப்ட்
ADDED : அக் 25, 2024 04:44 AM
விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் உள்ள லிப்ட் அனுமதியின்றி இயங்குவதால் பேரிடர் கால விபத்து ஏற்படும் போது பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள பெரிய கடைகள், வணிக நிறுவனங்களில் லிப்ட் மின்துறையின் அனுமதி பெற்று இயங்க வேண்டும். ஆனால் பல இடங்களில் அனுமதி பெறாமல் லிப்ட் இயங்குகின்றன. இவற்றின் பலவீனத்தன்மை, உறுதிநிலை போன்றவற்றை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய அரசு தரப்பில் யாரும் இல்லை.
ஆனால் மாவட்டத்தில் பல வணிக நிறுவனங்களில் லிப்ட்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அனுமதியின்றி இயங்குகின்றன. இது போன்று அனுமதி பெற அப்ரூவ்டு பிளான் இருக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, தடையின்மை சான்று பெறாத கடைகள் அப்ரூவல் பிளான் இருப்பதில்லை. இதனால் இவர்கள் மின் துறையிடம் அனுமதி பெறுவதும் கிடையாது. அடுக்குமாடி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அனுமதியின்றி லிப்ட் அமைத்து விடுகின்றனர்.
இது பேரிடர் கால விபத்து ஏற்படும் போதோ, மின் விபத்தால் லிப்ட்கள் நிற்கும் போதோ பாதிப்பை ஏற்படுத்தும்.மாவட்ட நிர்வாகம் இதை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். லிப்ட்கள் தரமாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் லிப்ட்கள் இயங்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.