நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூ.,24 வது நகர் குழு மாநாடு நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், தேவா பேசினர். கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நீர்வரத்து ஓடை பாலங்களில் தேங்கியுள்ள அடைப்புகளை அகற்றவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்தல், பஸ் ஸ்டாண்ட் கட்டணமில்லா சுகாதார வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும், புதிய குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் பொருத்தவும், அரசு மருத்துவமனையில் கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி கணேசன் நன்றி கூறினார்.