/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில் பயணியிடம் நகை பறித்தவர் கைது
/
ரயில் பயணியிடம் நகை பறித்தவர் கைது
ADDED : நவ 28, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் அருள் ஜோதி 54. இவர் நாகர்கோவிலில் உற வினர்களை பார்த்து விட்டு நவ. 25 அதிகாலை 1:30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் வந்தார்.
இவர் துணிப்பையில் வைத்திருந்த 9.5 பவுன் நகை திருடு போனது விருதுநகர் வந்ததும் தெரிந்தது. ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சி.சி.டி.வி., கேமராக்களை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த மல்லி முத்து பாண்டியனை 45, கைது செய்து நகையை மீட்டனர்.

