/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏ.டி.எம்.,ல் கார்டை மாற்றி பணம் மோசடி செய்த பெண் கைது
/
ஏ.டி.எம்.,ல் கார்டை மாற்றி பணம் மோசடி செய்த பெண் கைது
ஏ.டி.எம்.,ல் கார்டை மாற்றி பணம் மோசடி செய்த பெண் கைது
ஏ.டி.எம்.,ல் கார்டை மாற்றி பணம் மோசடி செய்த பெண் கைது
ADDED : நவ 28, 2025 08:02 AM
காரியாபட்டி: காரியாபட்டி ஏ.டி.எம்.,ல் மாரிமுத்து 60, என்பவரின் கார்டை மாற்றி பணம் எடுத்த காளீஸ்வரியை23, போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி உடுப்புகுளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே ஏ.டி.எம்., ல் பணம் எடுக்க நின்று இருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண் பணம் எடுத்து தருவதாக கூறி கார்டை வாங்கி ரகசிய எண்ணை தெரிந்து கொண்டார். பின் நெட்வொர்க் வேலை செய்யவில்லை என தெரிவித்து அவரது கார்டை வைத்துக்கொண்டு, வேறு ஒரு கார்டை மாற்றிக் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து அவரது அலைபேசிக்கு ரூ. 18 ஆயிரத்து 200 எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.
காரியாபட்டி போலீசார் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து மதுரை மாவட்டம் திருமங்கலம் வெள்ளாகுளத்தைச் சேர்ந்த காளீஸ்வரி 23, யை பிடித்து பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.