ADDED : மார் 07, 2024 05:00 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மார்க்சிஸ்ட் சார்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விபரங்களை எஸ்.பி.ஐ., வங்கி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காமல் கால தாமதம் செய்யும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி முன்பு நகரச் செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் துவக்கியும், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கண்டன உரையும் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, முத்துக்குமார், முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
