/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்
ADDED : மே 02, 2025 06:06 AM
விருதுநகர்: விருதுநகரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின கொண்டாட்டம் நடந்தது.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு (ஜே.சி.டி.யு.,) சி.ஐ.டி.யு., சார்பில் மதுரை ரோடு ஸ்டேட் வங்கி முன்பு துவங்கி தேசபந்து மைதானம் வரை மே தின ஊர்வலம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். போக்குவரத்து பிரிவு பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கைவண்டி, மாட்டுவண்டி, லாரிசுமை ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த ஊர்வலத்தில் தலைவர் டேவிட் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிச்சைக்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (யு.டி.யு.சி.,) சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
* ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி., அமைப்புச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாநில உதவி தலைவர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். ஊர்வலம் பஞ்சு மார்க்கெட் தொடங்கி ஜவஹர் மைதானத்தில் முடிந்தது.
* சிவகாசியில் தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம், முகநுால் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடப்பட்டது.
அசோகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்கம் தலைவர் தியாகராஜ் செயலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தனர்.