/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிப்பு புகை மண்டலத்தால் சிரமம்
/
மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிப்பு புகை மண்டலத்தால் சிரமம்
மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிப்பு புகை மண்டலத்தால் சிரமம்
மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிப்பு புகை மண்டலத்தால் சிரமம்
ADDED : ஜூன் 12, 2025 01:54 AM

நரிக்குடி: நரிக்குடியில் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். புகை மண்டலமாக காற்றில் பரவுவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
நரிக்குடியில் தனியார் மருத்துவமனைகள், மெடிக்கல்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் சிரிஞ்சுகள், ரத்த கரை படிந்த துணிகள், பஞ்சுகள், குளுக்கோஸ் பாட்டில்கள் கழிவுகள், மெடிக்கல்களில் காலாவதியான மாத்திரைகள், டானிக்குகள் என மருத்துவ கழிவுகளை குடியிருப்பு பகுதியில் குப்பைகளாக கொட்டுகின்றனர்.
அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் ஊசிகளை எடுத்து விளையாடுகின்றனர்.
தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிக அளவில் சேர்ந்த குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து எரிகின்றனர். இதிலிருந்து வெளியாகும் புகை மண்டலம் அப்பகுதி குடியிருப்புகளுக்குள் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை பொதுவெளியில் குவித்து தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.