/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
/
மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
ADDED : ஜூன் 28, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோயிலில் நேற்று காலை 10:30 மணிக்கு சாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. கொடி ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு தீபாராதனை காட்டி கொடியேற்றம் நடந்தது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் மீனாட்சி, சொக்கநாதர் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 10 ம் நாள் விழாவாக திருக்கல்யாணம் நடக்கிறது. 11 ம் நாள் மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.