/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வருடன் சந்திப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்
/
முதல்வருடன் சந்திப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்
ADDED : நவ 15, 2024 06:18 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தீப்பொட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழாவிற்கு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சீனா பிளாஸ்டிக் லைட்டருக்கு மத்திய அரசு மூலம் தடை பெற்று கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதில் சிவகாசி ஆல் இந்திய மேச் சேம்பர் நிர்வாகிகள் மகேஸ்வரன், பிலால் நுார் முகமது, தலைவர் நாகராஜன், பிரமோத், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், துணை தலைவர் கோபால்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.