/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வரும் முன்பே தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சேதமடையும் மீட்டர்கள்
/
செயல்பாட்டிற்கு வரும் முன்பே தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சேதமடையும் மீட்டர்கள்
செயல்பாட்டிற்கு வரும் முன்பே தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சேதமடையும் மீட்டர்கள்
செயல்பாட்டிற்கு வரும் முன்பே தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சேதமடையும் மீட்டர்கள்
ADDED : ஜன 14, 2025 10:42 PM
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் முன்னரே குடிநீரை அளவீடு செய்யும் மீட்டர்கள் சேதம் அடைந்தும் காணாமல் போவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில் ஆற்றில் இருந்து வரும் நீரை ஆறாவது மைல் நீர்த்தேக்கத்தில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படுகிறது.
தினசரி 80 லட்சம் லிட்டர் நபருக்கு 60 லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதிகரிக்கும் குடிநீர் தேவை கோடை காலத்தின் பற்றாக்குறை கருத்தில் கொண்டு தினசரி 1.30 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலை தொட்டிகள் அமைத்து பணிகள் நடந்தன.
வீடுகளுக்கு குடிநீர் சப்ளையாகும் அளவை கணக்கிடுவதற்காக வீட்டின் வெளிச்சுவரில் மீட்டர் பொருத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு கடந்துள்ள நிலையில் விநியோகத்திற்கான அழுத்த சோதனை பணிகள் முடியவில்லை.
இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்பட்ட மீட்டர்கள் சேதம் அடைந்தும், காணாமலும் போய் உள்ளன. இதற்கு வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ள சூழலில் முழுமையான சப்ளை தொடங்கும் போது சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தடுப்பது, பயன்படுத்தும் அளவீடு பொறுத்து கட்டணம் போன்ற எதிர்கால தேவை கருதி பொருத்தப்பட்ட மீட்டர்களை குடிநீர் சப்ளை ஆவதற்கு முன் காணாமல் போனது, சேதமானதை பராமரிப்பு செய்து தர மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.