/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை
/
மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை
மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை
மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை
ADDED : ஜன 27, 2025 03:54 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி ராம்குமாரை 33 வெட்டி கொலை செய்த உறவினர் காளிராஜை 25 போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் ஒத்தைப்பட்டி தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி ராம்குமார். இவரது மனைவி சந்தனமாரி 28. இரு குழந்தைகள் உள்ளனர். உறவினர் காளிராஜை 25, பணி அமர்த்தியிருந்தார். இந்நிலையில் சந்தன மாரியுடன் காளிராஜூக்கு தவறான வகையில் தொடர்பு ஏற்பட்டது.
இரண்டு குழந்தைகளுடன் சந்தனமாரி, காளிராஜ் தலைமறைவாகி வெளியூரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காளிராஜ், சந்தனமாரி ராஜபாளையம் திரும்பினர். மனைவியுடன் தொடர்பு வைத்ததுதொடர்பாக ராம்குமார் காளிராஜை தட்டிகேட்டார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற காளிராஜ் ராம்குமாரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்தார். வடக்கு போலீசார் விசாரித்து காளிராஜை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.