/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் வீணாகும் மினரல் வாட்டர் பிளான்ட் மிஷின்
/
நரிக்குடியில் வீணாகும் மினரல் வாட்டர் பிளான்ட் மிஷின்
நரிக்குடியில் வீணாகும் மினரல் வாட்டர் பிளான்ட் மிஷின்
நரிக்குடியில் வீணாகும் மினரல் வாட்டர் பிளான்ட் மிஷின்
ADDED : டிச 22, 2024 07:07 AM

நரிக்குடி : நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. பல லட்சம் செலவில் பொருத்தப்பட்ட மினரல் வாட்டர் பிளான்ட் மிஷின் பயன்பாடின்றி கிடப்பதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டது. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கோரிக்கைகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வர். மக்களின் தாகம் தீர்க்க ரூ. பல லட்சம் செலவில் மினரல் வாட்டர் பிளான்ட் பொருத்தப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
முறையாக பராமரிக்காததால் குடிநீர் சப்பையில் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் அதை சரி செய்யாததால் ரூ. பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட மினரல் பிளான்ட் மிஷின் வீணானது. அதிகாரிகள் மினரல் வாட்டர் பிளாண்டை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தண்ணீர் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.