
சிவகாசி, : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 61வது விளையாட்டு விழாவினை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு 12.5 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கல்லுாரியில் துவங்கிய மினி மாரத்தான் ரிசர்வ்லைன், சாட்சியாபுரம், பிள்ளையார் கோவில், செங்கமல நாச்சியார்புரம் வழியாக சென்று மீண்டும் கல்லுாரியில் முடிவடைந்தது.
முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் பரிசு, கோப்பை வழங்கினார். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பால் ஜீவ சிங், உடற் கல்வியியல் துறை தலைவர்கள் சுரேஷ்பாபு, ஜான்சன், உடற்கல்வி உதவி இயக்குனர் கவிதா, துறை பேராசிரியர்கள் செய்தனர்.