/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் பங்கேற்பு
/
வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் பங்கேற்பு
ADDED : ஆக 16, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், அமிர்தபுரம் காலனியில் சமுதாய கழிப்பிடம் , நெசவாளர் காலனியில் நகராட்சி உயர்நிலை பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், திருச்சுழி ரோடு பிரமடை ஓடை புனரமைக்கும் பணி முடிந்து அதை திறந்தும் வைத்தார். தெற்கு தெருவில் ஒரு கோடியே ஒரு லட்சம் நிதியில் அமைக்க உள்ள எக்கோ பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, கமிஷனர் ராஜமாணிக்கம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், தி.மு.க., நகரச் செயலாளர் மணி, துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.