/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதியை தர மறுக்கிறது; அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
/
மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதியை தர மறுக்கிறது; அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதியை தர மறுக்கிறது; அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதியை தர மறுக்கிறது; அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
ADDED : மார் 30, 2025 04:24 AM

அருப்புக்கோட்டை : தமிழகத்திற்கு மத்தியரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கவேண்டிய 4 ஆயிரம் கோடி நிதியை தர மறுக்கிறது,'' என அருப்புக்கோட்டை பாலவநத்ததில் நடந்த தி.மு.க.,ஆர்பாட்டத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் ஊராட்சி அலுவலகம் அருகில், வடக்கு ஒன்றிய திமுக சார்பில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது : மத்திய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கவேண்டிய 4 ஆயிரம் கோடி நிதியை தர மறுக்கிறது. தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதினாலும் பணத்தை தர மோடி அரசு மறுக்கிறது. மோடி வீட்டு பணத்தை கொடுக்கவில்லை. நம் வரியைத் தான் கொடுக்கிறார்கள். இங்கு போராட்டம் நடத்துவது டெல்லி வரை செல்லும். அனைவரும் ஒன்றிணைந்து பணத்தை வாங்க வேண்டும்,என்றார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* இதேபோன்று ஆர்ப்பாட்டம் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி பஸ் ஸ்டாப் முன்பு நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேசன், நிர்வாகி அழகு ராமானுஜம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., சீனிவாசன், விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், நகரச் செயலாளர் தனபாலன், கவுன்சிலர் மதிவேந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்திற்கு தேவையான நிதியை கேட்கும் போது எல்லாம் மத்திய அரசு வழங்க மறுக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் காங்., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால் இத்திட்டத்தை முடக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
இத்திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 4034 கோடியை விடுவிக்காமலும், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதியை வழங்குவதும் இல்லை. இதனால் வெயில், மழையில் உழைத்த பெண்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை அரசால் வழங்க முடியவில்லை. மத்திய அமைச்சர்களிடம் நேரில் சென்றும் கேட்டும் நிதி வழங்கப்படவில்லை, என்றார்.
* தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தார். ராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.