/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'அடுத்த மாதத்திற்குள் சரிபார்ப்பு முடிந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்' அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ADDED : அக் 26, 2025 01:39 AM
விருதுநகர்: ''அடுத்த மாதத்திற்குள் விண்ணப்பம் சரி பார்ப்புகள் முடிந்து தகுதி யுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்'' என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
ஏழை, எளிய மக் களுக்கு பட்டா வழங்குவது மாபெரும் இயக்கமாக தற்போது மாறியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள், அவர்களின் மீதான நம்பிக்கையை வெளிகாட்டுகிறது.
பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு கண் கண்ட தெய்வமாக இருப்பது சுயஉதவிக்குழுக்கள். 40 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊன்றிய விதை, தற்போது மாநிலம் முழுவதும் பரவியுள்ளது.
டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், வெளிநாடுகளில் சுயஉதவிகுழுக்கள் தயாரிக்கும் பொருட் களுக்கு வரவேற்பு உள்ளது.
அரசின் மானியத்தில் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி இருந்தால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் உட்பட பல்வேறு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வருகிறது.
அடுத்த மாதத்திற்குள் விண்ணப்பங்களுக்கான சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளி களுக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்றார்.