/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்குலர் ரோடு பணிகள் அமைச்சர் ஆய்வு
/
சர்குலர் ரோடு பணிகள் அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 21, 2024 04:31 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரில் புறவழிச் சாலை(சர்க்குலர் ரோடு) விருதுநகர் ரோட்டின் மேற்கு புறத்தில் கோபாலபுரம் வழியாக பாலையம்பட்டி மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலை வழியாகச் செல்லவும், விருதுநகர் ரோட்டில் இருந்து கிழக்குப் பகுதி சுக்கிலநத்தம் பகுதி வழியாக ராமசாமிபுரம் வழியாகச் செல்லும் மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலை செல்லவும் புறவழிச் சாலை பணிகள் ரூ.154 கோடி நிதியில் நடந்து வருகிறது.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நேற்று இந்த ரோட்டை ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்களால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் பாதிப்பு அடைகின்றனர். பணிகள் முடிந்து மார்ச் 2025ல் பயன்பாட்டிற்கு வந்து விடும், என்றார். கலெக்டர் ஜெயசீலன் உடனிருந்தார்.

