UPDATED : ஜூலை 30, 2026 06:24 PM
ADDED : ஜூலை 30, 2026 06:11 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் என்னும் நடமாடும் பேருந்து விண்வெளி கண்காட்சி நடந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சாதனைகள் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த கண்காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன் துவக்கி வைத்தனர்.
விண்வெளி நிலைய அதிகாரி குமார் மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். நிலைய வானொலி கல்வி அமைப்பைச் சேர்ந்த பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகள் கண்காட்சியை கண்டு களித்தனர். மாணவிகளுக்கான ராக்கெட் மாடலிங் உருவாக்கும் போட்டியும் நடந்தது. இஸ்ரோவில் சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து மாணவிகள் கேட்டு தெரிந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேதியல் துறை ஆசிரியர் ராம்குமார் செய்தார்.
