/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அல்லாளப்பேரியில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களால் வீணாகும் நிதி
/
அல்லாளப்பேரியில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களால் வீணாகும் நிதி
அல்லாளப்பேரியில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களால் வீணாகும் நிதி
அல்லாளப்பேரியில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களால் வீணாகும் நிதி
ADDED : பிப் 14, 2025 06:31 AM

காரியாபட்டி: காரியாபட்டி அல்லாளப்பேரியில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம், சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடப்பதால் அரசு நிதி வீணாகிறது. பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அல்லாளப்பேரியில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ. பல லட்சம் செலவில் சுய உதவிக் குழு கட்டடம் கட்டப்பட்டது. அதன் அருகே ரூ. பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஒரு சில மாதங்கள்மட்டுமே பயன்பாட்டில்இருந்த நிலையில், தற்போது பயன்பாடின்றி கிடக்கிறது. மர்ம நபர்கள்ஜன்னல், இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர். அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. சுகாதார வளாகத்தை திறக்காததால் திறந்தவெளியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரசு நிதி ரூ. பல லட்சங்கள் வீணடிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் புழக்கம் இல்லாததால் கட்டடம் சேதம் அடைந்து வருகிறது. வி.ஏ.ஓ., கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. மாற்று ஏற்பாடாக அங்கு வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட வழங்கலாம். அல்லது வேறு அரசு அலுவலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.