sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மான்கள் வேட்டை தடுக்க கண்காணிப்பு அவசியம்: தன்னார்வலர் குழு அமைக்க எதிர்பார்ப்பு

/

மான்கள் வேட்டை தடுக்க கண்காணிப்பு அவசியம்: தன்னார்வலர் குழு அமைக்க எதிர்பார்ப்பு

மான்கள் வேட்டை தடுக்க கண்காணிப்பு அவசியம்: தன்னார்வலர் குழு அமைக்க எதிர்பார்ப்பு

மான்கள் வேட்டை தடுக்க கண்காணிப்பு அவசியம்: தன்னார்வலர் குழு அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : பிப் 03, 2025 04:56 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: மாவட்டத்தில், பரவலாக அனைத்து இடங்களிலும் சுற்றித் திரியும் மான்களை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். வனப்பகுதியை தாண்டி இச்சம்பவம் நடைபெறுவதால் அதிகாரிகள் கண்காணிப்பதில் சிரமம் உள்ளது. வனத்துறையினருக்கு உதவ தன்னார்வலர் குழுவை கிராம அளவில் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மான்கள் சுற்றித் திரிகின்றன. போதிய இரை, தண்ணீர் கிடைக்காதது, அப்பகுதியில் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயருகின்றன. இதில் பெரும்பாலான மான்கள் குண்டாறு, வைப்பாறு வழியாக பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன.

ஆற்றில் சீமை கருவேல மரங்கள், நாணல்கள் அதிக அளவில் இருப்பதால் ஆங்காங்கே தங்குகின்றன. அப்பகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து, குட்டிகளுடன் இரை, தண்ணீர் தேடி செல்கின்றன. தற்போது காரியாபட்டி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரை ஓரங்களில் அதிக அளவில் மான்கள் வசிக்கின்றன.

அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்ல ரோட்டை கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இது போன்ற சம்பவம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அதே சமயம் சீமை கருவேல மரங்களுக்குள் தங்கி இருக்கும் மான்களை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். இது சட்டப்படி குற்றம் என தெரிந்தும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இச் சம்பவங்கள் நடைபெறுவது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கண்காணிப்பதும் சிரமமான காரியமாக இருந்து வருகிறது. இருந்தாலும், தொடர்ந்து மான்களை வேட்டையாடும் போது மான் இனம் அழியும் ஆபத்து உள்ளது. பரவலாக சுற்றித் திரியும் மான்கள் அப்பகுதியில் நடமாடுவது கேள்விக்குறியாகும். இதனை தடுக்க வேண்டும்.

அதற்காக கிராம அளவிலான தன்னார்வலர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சம்பவம் நடந்தால் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். மான்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க கண்காணிக்க வேண்டியது அவசியம். அதற்காக தன்னார்வலக் குழு அமைக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us