/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைநீர் ஓடையை சேதப்படுத்தியதால் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
மழைநீர் ஓடையை சேதப்படுத்தியதால் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு
மழைநீர் ஓடையை சேதப்படுத்தியதால் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு
மழைநீர் ஓடையை சேதப்படுத்தியதால் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 04, 2024 03:57 AM
அருப்புக் கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் காந்தி நகர் சர்வீஸ் ரோடு பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் ஓடையை மேல் பகுதியை சேதப்படுத்தி விட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காந்தி நகர் வழியாக செல்லும் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இதில் கஞ்சா நாயக்கன்பட்டிக்குச் செல்லும் சர்வீஸ் ரோட்டில் மழை நீர் வடிகால் ஓடை மேற்பகுதி மூடப்பட்டுள்ளது. இதை கடந்து தான் பொதுமக்கள் தங்களுடைய தெருக்களுக்கு செல்வர்.
ஓடையை சுத்தம் செய்வதாக கூறி மேற்பகுதியை யாரோ பெயர்த்து எடுத்து விட்டனர். இதனால் கம்பிகள் வெளியே நீட்டி, வாகனங்களின் டயர்களை குத்தி கிழிக்கிறது. ஓடையை கடந்து தெருவிற்கு செல்ல முடியாமல் நான்கு சக்கர இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மாலை நேரங்களில் வீடு திரும்பும் பள்ளி மாணவர்கள் தடுமாறி ஓடைக்குள் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி, நெடுஞ்சாலை துறை, நகராட்சி ஆகியவை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என பதில் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மழை நீர் ஓடையை மூடி தெருக்களுக்கு செல்வதற்குரிய வழியை ஏற்படுத்த வேண்டும்.