/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் தாமதத்தில் எம்.ஜி.ஆர்., சாலை பணிகள் கடக்க முடியாமல் அல்லாடும் வாகன ஓட்டிகள்
/
தொடர் தாமதத்தில் எம்.ஜி.ஆர்., சாலை பணிகள் கடக்க முடியாமல் அல்லாடும் வாகன ஓட்டிகள்
தொடர் தாமதத்தில் எம்.ஜி.ஆர்., சாலை பணிகள் கடக்க முடியாமல் அல்லாடும் வாகன ஓட்டிகள்
தொடர் தாமதத்தில் எம்.ஜி.ஆர்., சாலை பணிகள் கடக்க முடியாமல் அல்லாடும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 11, 2025 06:37 AM

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில்இருந்து நான்கு வழிச்சாலை செல்லும் முக்கிய ரோடான எம்.ஜி.ஆர்., சாலை பணிகள் மழைக்காலத்தில் துவங்கியதோடு, தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. மாவட்ட தலைநகருக்கு தகுதியற்ற இந்த விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த ஓராண்டாகவே விருதுநகரில் ரோடு பணிகளில் மெத்தனம் நிலவுகிறது. புது பஸ் ஸ்டாண்டை திறக்க முந்தைய கலெக்டர் ஜெயசீலன் நடவடிக்கை எடுத்த போதே, நான்கு வழிச்சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு முக்கிய வழித்தடமாக உள்ள எம்.ஜி.ஆர்., சாலையை விரிவுப்படுத்தி, சென்டர் மீடியன் வைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக அடுத்த நிதிக்குழுமத்தை கணக்கில் கொண்டு திட்ட வரைவு அனுப்பப்பட்டது. இந்நிலையில் 2025 ஜூன் மாதம் ரூ.1 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் முதல் நாள் விரிவாக்கத்திற்காக ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்தி விட்டு பின் அப்படியே விட்டு விட்டனர்.
கிட்டதட்ட 5 மாதங்கள் கழித்து நவ. ல் தான் சென்டர் மீடியன் கட்டும் பணி செய்தனர்.அதே போல் ரோடு இருபுறமும் தோண்டி போட்ட நிலையில்அதில் கிராவலை போட்டுள்ளனர்.
மழை பெய்தால் அவை சேறும் சகதியுமாகி பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.இந்த வழியாக தினசரி நுாற்றுக்கணக்கில் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதால் ரோடு மேலும் மோசமானது.
பல கார்கள் இந்த வழியாக வந்து ரோட்டில் மாட்டிக் கொண்டுள்ளன. முதியவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ரோட்டில் பயணித்தால் நிச்சயம் உடல் நலக்கோளாறு ஏற்படும்.
மேலும் நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைபாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதை மாற்றி விட்டு வாகன ஓட்டிகளை அல்லல்படுத்துகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஒரு பக்கம் சோதித்தால், நெடுஞ்சாலைத்துறை மறு பக்கம் மக்களை படுத்துகிறது.
வளைவு பகுதியில் மண் மேவி வாகன ஓட்டிகள கடும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. டூவீலர்கள் பல சறுக்கி விழுந்துள்ளன.
பலர் இது மாவட்ட தலைநகருக்கு தகுதி இல்லாத நகராட்சி என குற்றம் சாட்டும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எம்.ஜி.ஆர்., சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாமதம் ஆனால் நிச்சயம் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்.

