/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஷப்பூச்சிகளின் நடமாட்டம், ரோடின்றி அல்லல் விருதுநகர் ரோசல்பட்டி பெரியார் காலனி குடியிருப்போர்
/
விஷப்பூச்சிகளின் நடமாட்டம், ரோடின்றி அல்லல் விருதுநகர் ரோசல்பட்டி பெரியார் காலனி குடியிருப்போர்
விஷப்பூச்சிகளின் நடமாட்டம், ரோடின்றி அல்லல் விருதுநகர் ரோசல்பட்டி பெரியார் காலனி குடியிருப்போர்
விஷப்பூச்சிகளின் நடமாட்டம், ரோடின்றி அல்லல் விருதுநகர் ரோசல்பட்டி பெரியார் காலனி குடியிருப்போர்
ADDED : பிப் 05, 2025 04:47 AM
விருதுநகர்: தெருவிளக்குகள் இன்றி இருள் சூழ்ந்த குடியிருப்புகள், அருகே புதர்மண்டியுள்ள கருவேல மரங்களால் விஷப்பூச்சிகள் நடமாட்டம், ரோடுகளே இல்லாததால் பரிதவிக்கும் சூழல் என விருதுநகர் ரோசல்பட்டி பெரியார் காலனி குடியிருப்போர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி பெரியார் காலனி குடியிருப்போர் மணிகண்டன், சுமதி, அழகம்மாள் ஆகியோர் கூறியதாவது: எங்கள் பகுதியில் 220 குடியிருப்புகள் உள்ளன.
25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து விட்டன. பராமரிப்பு இல்லாததால் அவை கைவிடப்பட்டுள்ளன.
மேலும் அக்கட்டடங்களுக்கு எவ்வித சுகாதார வளாக வசதியும் செய்து தரப்படவில்லை.
தற்போது வீடுகள் அதிகரித்து விட்டன. தெருக்களில் பேவர் பிளாக் ரோடு வசதி இல்லை. எங்கள் குடியிருப்பு உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்விதமான அடிப்படை வசதியும் இல்லை.
தெருவிளக்குகள் சுத்தமாக இல்லை. வீடுகளில் எரியும் பல்புகளின் வெளிச்சம் தான் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுகிறது. ரோடு இல்லாததால் தட்டி தடுமாறி செல்ல வேண்டியுள்ளது.
மேலும் மண்ரோடாக இருப்பதாலும், காலி நிலங்கள் பள்ளங்கள் அதிகம் உள்ளதால் சிறிய மழை பெய்தாலும் மழைநீர் தேங்குகிறது. வாறுகால் வசதி இல்லாததாலும், மழைநீர் தேங்குவதால் நோய் அச்சம் ஏற்படுகிறது.
இந்நேரங்களில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தெருவிளக்குகள் அதிகளவில் ஏற்படுத்தி தர வேண்டும். தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மனு அளித்து வெறுத்து போயுள்ளோம்.
ஊராட்சி நிர்வாகத்திடம் ரோடு தொடர்பாக கோரிக்கை வைத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது பதவிக்காலம் முடிந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை.
மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம். சுபநிகழ்ச்சிகள் நடத்த சமுதாயக்கூடம் அமைத்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.