/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போர்வெல் அமைக்க கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
போர்வெல் அமைக்க கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 24, 2025 02:58 AM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை தம்மாந்தெருவில் போர்வெல் அமைக்க கோரி நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 32 வது வார்டை சேர்ந்தது தம்மாந் தெரு. இங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிகுழாய் அமைக்கப்பட்டு இருந்தது. இதை தனியார் ஆக்கிரமித்து அடிகுழாயை இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டனர். பொது மக்களின் பயன்பாட்டிற்காக அந்த இடத்தில் போர்வெல் அமைத்து சிறு குடிநீர் தொட்டி வசதி செய்யுமாறு நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கத்திடம் மனு அளித்தனர். அந்த இடத்தை பார்வையிட்டு போர்வெல் அமைப்பதாக கமிஷனர் உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
___