/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லோடுமேனை கொலை செய்து கண்மாயில் புதைத்த மர்ம நபர்கள்
/
லோடுமேனை கொலை செய்து கண்மாயில் புதைத்த மர்ம நபர்கள்
லோடுமேனை கொலை செய்து கண்மாயில் புதைத்த மர்ம நபர்கள்
லோடுமேனை கொலை செய்து கண்மாயில் புதைத்த மர்ம நபர்கள்
ADDED : ஆக 16, 2025 02:30 AM
சிவகாசி: சிவகாசி அருகே லோடுமேனை கொலை செய்து திருத்தங்கல் கண்மாயில் புதைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியில் ஒரே வாரத்தில் 3 இளைஞர்கள் கொலை செய்யப் பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் மண்ணில் புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆணின் உடலை நாய்கள் வெளியே இழுத்து போட்ட நிலையில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வந்தனர்.
உடல் புதைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியதால் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்தவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
உடலில் இருந்த டாட்டு உள்ளிட்ட அடையாளங்களை வைத்து, இறந்தது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த லோடுமேன் சுந்தரமகாலிங்கம் 28, என்பது தெரிய வந்துள்ளது.
முன் விரோதத்தால் சுந்தர மகாலிங்கம் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி நேருஜி நகரில் அண்ணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான தம்பி கணேஷ் பாண்டி ஐந்து நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்ட பால் வியாபாரி தர்மராஜியின் உடல் நான்கு நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது.
சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.